News April 21, 2024

தேனி: ஓட்டு போட சென்ற பெண் பலி

image

தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இதய நோயால் பாதிக்கப்பட்டு தினமும் தவறாமல் மருந்து சாப்பிட்டு வந்தார். கடந்த 19ஆம் தேதி ஓட்டு போடுவதற்காக சென்றபோது இதய நோய்க்கான மாத்திரை சாப்பிடாமல் சென்றுள்ளார். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

Similar News

News April 19, 2025

மலர் கண்காட்சியை கண்டுகளித்த மாற்றுத்திறனாளிகள்

image

கேரளா மாநிலம் தேக்கடியில் நடைபெற்ற மலர் கண்காட்சியை, கம்பம் தேனீக்கள்  மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, ஜெயம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மலர் கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News April 19, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 19.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News April 19, 2025

காணொலி காட்சி மூலம் பார்வையிட்ட ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (19.04.2025) காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வினை, காணொளிக்காட்சி வாயிலாக, தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் மற்றும் கைவினைஞர்கள் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.

error: Content is protected !!