News June 25, 2024
தேனி எம்.பி. ஆனார் தங்கதமிழ்செல்வன்

தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தங்க தமிழ்ச்செல்வன், தேனி மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News December 12, 2025
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்து சேவை செய்தவர்களுக்கு “அவ்வையார் விருது” மார்ச் 8 அன்று வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற தகுதி உடையவர்கள் https://awards.tn.giv.in என்ற இணையதளத்தின் வாயிலாக 31.12.2025-க்குள் பதிவு செய்து வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இணையத்தில் பதிவு செய்த ஆவணங்கள் கையேடாக மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 3.1.2026 அன்று சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
News December 12, 2025
தேனியில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்!

தேனி வழக்கறிஞர் கணேசன். இவர் தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கில் கண்டமனூர் வேல்முருகனுக்கு கடந்த மாதம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பளித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் அவரது நண்பர் அசோக்குமார் சேர்ந்து வழக்கறிஞர் கார் முன் டயர்களை சேதப்படுத்தி, ஆவணங்களை திருடி சென்றனர். மேலும், அலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வழக்கறிஞர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை.
News December 12, 2025
தேனி மக்களே ரேஷன் கார்டு இருக்கா.. முக்கிய அறிவிப்பு

தேனியில் ரேஷன் கார்டு சேவை குறித்த மக்கள் குறைதீர் முகாம் தேவதானப்பட்டி, உப்பார்பட்டி, கொப்பையன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கொட்டக்குடி ஆகிய இடங்களில் நாளை (டிச.13) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு (ம) மாற்றம், கடை மாற்றம் ஆகியவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.


