News April 20, 2025
தேனி உழவர் சந்தையில் காய்கறி விலை விபரம்

தேனி உழவர் சந்தையில் (ஏப்ரல் 20) கத்தரி ரூ.20/18, தக்காளி ரூ.17-14, வெண்டை ரூ.18, கொத்தவரை ரூ.16, சுரை ரூ.08, இஞ்சி ரூ.32, பாகல் ரூ.32, பீர்க்கை ரூ.35, பூசணி ரூ.14/10, மிளகாய் ரூ.30/20, அவரை ரூ.75-45, உருளை ரூ.28, கருணை ரூ.80, சேனை ரூ.58/55, உள்ளி ரூ.35/30, பல்லாரி ரூ.24, பீட்ரூட் ரூ.16, நூல்கோல் ரூ.28, பீன்ஸ் ரூ.44/40, கோஸ் ரூ.16, கேரட் ரூ.25/15, சவ்சவ் ரூ.12 க்கு விற்கப்படுகிறது.
Similar News
News November 16, 2025
தேனி: மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் குமராண்டி (61). இவர் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலையில் சுமை தூக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று (நவ.15) வேலைக்கு சென்ற அவர் அங்குள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது திடீரென குமராண்டி மயங்கி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.
News November 16, 2025
தேனி: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

தேனி மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம் (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE IT
News November 16, 2025
தேனி மருத்துவகல்லூரி மாணவிகள் விபத்தில் படுகாயம்

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ராகினி என்பவர் நேற்று (நவ.15) அவரது இருசக்கர வாகனத்தில் அவரது தோழியான மீனாட்சி என்பவரை அழைத்துக் கொண்டு தேனி சென்று விட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பி உள்ளார். மதுரை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் மாணவிகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு.


