News April 2, 2025

தேனி : இலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி

image

தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஏப்ரல்28 முதல்
(30 நாட்கள்) இலவச செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். இது குறித்து சந்தேகங்களுக்கு 94427 58363 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . சுய தொழில் தொடங்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Similar News

News December 12, 2025

தேனி: சிறுமி கர்ப்பம்; தொழிலாளி மீது போக்சோ

image

நாமக்கல், திருச்செங்கோட்டை சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் ரவி பெரியகுளத்தில் வேலை செய்த நிலையில், தகவல் அறிந்து பெரியகுளம் வந்த சிறுமியை ரவி கடந்த ஜுன் மாதம் திருமணம் செய்தார். தற்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பெரியகுளம் ஊராட்சி ஊர்நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோவின் கீழ் ரவி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 12, 2025

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கட்டுரை எழுதும் நபருக்கு பரிசு

image

தேனி மாவட்டத்தில் நான்காவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு தனித்துவம் சிறப்புகள் மற்றும் வரலாறு குறிப்புகள் குறித்து ஒரு பக்கம் கட்டுரைகளை சிறந்த முறையில் அனுப்பும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இதில் வருகின்ற 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 8 நாட்கள் தேளி நகரம் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

News December 12, 2025

தேனி மாணவர்கள் கவனத்திற்கு – ஆட்சியர்

image

தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்வகுப்பினை சார்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் https. Umis.tn.gov.in. என்ற இணையதளம் மூலம் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!