News March 20, 2024
தேனி ஆட்சியர் புதிய புகார் எண் அறிவிப்பு

சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய செய்திகளை பிரச்சாரங்களாக மேற்கொண்டால் அல்லது அவர்களது அலைபேசிக்கு ஆட்சேபனையான குறுங்செய்தி/பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் வந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் 93638 73078 (வாட்ஸ்ஆப்) 04546-261730 (தொலைபேசி) ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
தேனி: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்..!

தேனி மக்களே, டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 3, 2025
தேனி: இளம் பெண்ணிடம் ரூ.6.30 லட்சம் மோசடி

தேனி, கோட்டைப்பட்டியை சேர்ந்த பானுமதி (30) அரசு ஐடிஐ.,யில் பிட்டர் படித்து அப்ரண்டிஸாக அரசு போக்குவரத்துக் கழக டெப்போவில் 2019ல் பயிற்சி பெற்றார். இவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றும் பழனிவேல் என்பவர் ரூ.6.30 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். தேனி போலீசார் பழனிவேல் மீது நேற்று (டிச.2) வழக்கு பதிவு.
News December 3, 2025
தேனி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 8 இன்று மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


