News April 1, 2025
தேனியில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.3,4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 29, 2025
திருக்கல்யாணத்தில் வைக்கப்பட்ட ஒரு தேங்காய் 2 லட்சத்திற்கு ஏலம்

போடி சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று (அக்.28) திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அபிஷேகத்திற்கு வரும் ஒரு தேங்காய் ஏலம் விடுவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த விழாவில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு அபிஷேகத்திற்கு வந்த ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் தேங்காயை ராஜன் என்பவர் ரூ 2 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.
News October 29, 2025
தேனி மாவட்டத்தில் நவ.1.ல் கிராம சபை கூட்டம்

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நவ.1 அன்று காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் ஊராட்சி தனி அலுவலர் மற்றும் பி.டி.ஓ.,க்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. தங்கள் ஊராட்சிகளில் நடக்கும் இந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து தெரிவித்து அதற்கான பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
தேனி: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

தேனியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


