News May 7, 2025
தேனியில் 3 இடங்களில் தபால்துறை பேக்கேஜிங் மையம்

தேனி மாவட்டத்தில் தேனி, சின்னமணூர், கம்பம் உள்ளிட்ட மூன்று தபால் நிலையங்களில் தற்போது பார்சல் பேக்கேஜிங் மையம் செயல்பட்டு வருவதாகவும் இங்கு வெவ்வேறு அளவுகளில் வணிகர்களின் தேவைக்கு ஏற்ப பார்சல் பெட்டிகள் கிடைக்கும் எனவும். இங்கு பொது மக்கள், வணிகர்கள் பார்சல் செய்வதற்கான பெட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி பார்சல் செய்து அனுப்பி பயன் பெறலாம் என தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
தேனி: தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

பெரியகுளம் அருகே மேல்மங்கலம் மேலத் தெருவை சார்ந்தவர் காசிநாதன். 3 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வில் வந்து பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலில் சிவனடியராக உள்ளார். இவரது நண்பர் அண்ணாத்துரை. காசிநாதனை வீட்டிற்கு சாப்பாட்டுக்கு அழைத்து சென்ற போது அண்ணாத்துரை மகன் முகிலன் யாசகரை ஏன் அழைத்து வந்தாய் என தகப்பனாரையும், யாசகரையும் அரிவாளால் வெட்டினார். தென்கரை போலீசார் வழக்கு பதிவு.
News December 6, 2025
தேனியில் தடுப்பூசி செலுத்திய 3 மாணவிகள் மயக்கம்

தேனியில் உள்ள பி.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (டிச.5) பொதுச் சுகாதாரத் துறை சாா்பில் மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் தடுப்பூசி செலுத்திய 3 மாணவிகள் மயக்கமடைந்தனா். இதையடுத்து தொடர் கண்காணிப்பிற்காக மூன்று மாணவிகளும் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.