News August 10, 2024

தேனியில் 2 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்

image

தேனி மாவட்டத்தில் மேல்மங்கலம், கெங்குவார்பட்டி, கீழவடகரை, வீரபாண்டி, கம்பம், கூடலூர், சின்னமனூர், குன்னூர் என 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டன. இங்கு 2023-2024ல் விவசாயிகளிடமிருந்து 7,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும், தேனி மாவட்டத்தில் இரு இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவுள்ளது என நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் தகவல் அளித்துள்ளார்.

Similar News

News December 16, 2025

தேனி: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

image

தேனி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News December 16, 2025

தேனியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்றவர் கைது

image

குமுளி போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (டிச.15) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது லோயர் கேம்ப் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்த 60 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News December 16, 2025

தேனி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

image

தேனி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

error: Content is protected !!