News April 12, 2025

தேனியில் 106 சமையல் உதவியாளர் பணி

image

தேனியில் உள்ள மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 106 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்

Similar News

News December 4, 2025

தேனி: ரூ.85,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

image

தேனி மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.85,000 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்யவும்.

News December 4, 2025

தேனி: டூ வீலர் வைத்திருப்போர் கவனத்திற்கு…மக்களே உஷார்

image

தேனியில் சமீப காலங்களாக குடியிருப்பு பகுதி, பேருந்து நிறுத்தம், சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். இதேபோல் போடி, பழனிசெட்டிபட்டி, அல்லிநகரம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் திருட்டு நடக்கிறது. ஆகையால் நள்ளிரவில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி CCTV காட்சிகளை சேகரித்து திருடர்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை.

News December 4, 2025

புத்தகத் திருவிழா லோகோ வடிவமைத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு

image

தேனி மாவட்டத்தில் 4வது புத்தக திருவிழா விரைவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து புத்தக திருவிழாவிற்கான இலட்சினையை (LOGO) கருத்துகளுடன் சிறந்த முறையில் வடிவமைத்து அனுப்பும் நபருக்கு ரூ.10,000‌ பரிசுத்தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தயார் செய்த இலச்சினையை thenipro@gmail.com என்ற இணைய தள முகவரிக்கு நாளைக்குள் (05.12.2025) அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!