News April 13, 2025

தேனியில் வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 அன்று காலை10 மணி முதல் 5.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ ஆகிய கல்வித் தகுதி உடையோர் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள <>இங்கு கிளிக்<<>> செய்தோ, 7695973923 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

Similar News

News November 22, 2025

தேனி: பைக் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

image

போடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (30) மின் ஊழியரான இவர், நேற்று (நவ.21) இரவு அவரது பைக்கில் தேனி – போடி சாலையில் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் சாலையின் குறுக்கே சென்றதால், திடீரென பிரேக் போட்டதில் விபத்து ஏற்பட்டு ரஞ்சித் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 22, 2025

தேனி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு<> க்ளிக் செய்து<<>> Grievance Redressal, தேனி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

News November 22, 2025

தேனி: தூக்குப் போட்டு தொழிலாளி தற்கொலை.!

image

வருஷநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெயபிரகாஷ் கூலி தொழிலாளி. இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.மனைவி நாகஜோதி இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதாக கேள்வி பட்டு, தனியாருக்கு சொந்தமாக தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!