News March 27, 2025
தேனியில் வீட்டின் கதவை உடைத்து திருட்டு

ஆண்டிபட்டி அருகே வைகை புத்தூரைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு. குடும்பத்துடன் கோவையில் தங்கிப் பணி செய்து வருகிறார். மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தார். இரு நாட்கள் கழித்து வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைத்து 1 பவுன் சங்கிலி திருடு போயிருந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 3, 2025
தேனி: மனைவி கோபித்து கொண்டதால் கணவன் தற்கொலை

தேனி, சீலையம்பட்டியை சேர்ந்த சதீஷ்க்கும் (35). இவரது மனைவி முனீஸ்வரிக்கும் அடிக்கடி தகாராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முனீஸ்வரி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சதீஸ், முனீஸ்வரி வீட்டிற்கு சென்று அவரை வீட்டிற்கு வருமாறு அழைத்தும், அவர் வர மறுத்தாதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சதீஸ் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் விசாரனை.
News December 3, 2025
தேனி: மின்னொளியில் ஜொலிக்கும் ஆட்சியர் அலுவலகம்

தேனியில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முழுவதும் ஊதா நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரும் நின்று ஆச்சரியபட்டு செல்வதை காண முடிகிறது.