News April 24, 2025

தேனியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட இயந்திர அபரேட்டர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு <>கிளிக் <<>>செய்து மே மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News September 19, 2025

ஆந்திராவிலிருந்து தேனிக்கு டூவீலரில் 14 கிலோ கஞ்சா கடத்தல்

image

தேவாரத்திலிருந்து ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்துக்கு டூவீலரில் சென்று ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை வாங்கி கொண்டு கடத்தி வந்த அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் 32, கோம்பை ஈஸ்வரனை 40, போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தேனியில் இருந்து விசாகபட்டினத்திற்கு டூவீலரிலேயே 1200 கி.மீ., துாரம் குறுக்கு வழித்தடங்களில் சென்று சில்லரை விற்பனையில் கிடைக்கும் கஞ்சாவை வாங்கி கடத்தி வந்தது தெரிந்தது.

News September 19, 2025

தேனியில் இங்கெல்லாம் நாளை மின்தடை

image

தேனியில் மின் பராமரிப்பு பணி காரணமாக தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தேனி புதிய பேருந்து நிலைய வளாகம், சிவாஜி நகர், பாரஸ்ட் ரோடு, சிட்கோ தொழிற்பேட்டை வளாகம், வடபுதுப்பட்டி, அரப்படித்தேவன்பட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகைபுதூர், ஜம்புலிபுத்தூர், மருகால்பட்டி, வைகை அணை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News September 19, 2025

தேனி: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

image

தேனி மாவட்ட த்தில் IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை தாங்கள் பெற தேனியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்து உள்ளார்.

error: Content is protected !!