News October 23, 2024
தேனியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

தேனி அல்லிநகரம் மூர்த்தி தெருவில் உள்ள நாயுடு சாவடி சங்கம் கட்டிடத்தில் அக்.25ஆம் தேதி முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தேனி நலம் ஹெல்த் கேர் சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் சர்க்கரை பரிசோதனை முகாம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்
Similar News
News November 21, 2025
தேனி: ரிப்போட்டருக்கு கொலை மிரட்டல்

போடி பகுதியை சேர்ந்தவர் வினோத்பாபு. இவர் ஒரு நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் போடியை சேர்ந்த மணிமாறன் (52), என்பவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டு அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில் மணிமாறன் வழக்கை வாபஸ் பெறுமாறு வினோத்பாபுவை தகாத வார்த்தையால் பேசி, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போடி போலீசார் மணிமாறன் மீது வழக்கு (நவ.20) பதிவு.
News November 21, 2025
தேனி: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

தேனி மக்களே, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க <
News November 21, 2025
தேனி அருகே சிறுமி கர்ப்பம்…பாய்ந்த போக்சோ

தேனி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 15 வயது மாணவி தொடர்ந்து பள்ளிக்கு செல்லவில்லை. இது குறித்த விசாரணையில் சிறுமி அவரது உறவினரான முத்துப்பாண்டி என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்துள்ளார். இதனை பயன்படுத்திய முத்துப்பாண்டி சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதால் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் முத்துப்பாண்டி மீது போக்சோ வழக்கு (நவ.20) பதிவு செய்து விசாரணை.


