News March 19, 2025
தேனியில் மழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிப்பு வெளியாகியது . அந்த வகையில் இன்று (மார்ச்.19) இரவு 10 மணி வரை தேனி உட்பட 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 20, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 20) நீர்மட்டம்: வைகை அணை: 59.32 (71) அடி, வரத்து: 150 க.அடி, திறப்பு: 722 க.அடி, பெரியாறு அணை: 113.40 (142) அடி, வரத்து: 221 க.அடி, திறப்பு: 311 க.அடி, மஞ்சளார் அணை: 31 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 69.37 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 33.50 (52.55) அடி, வரத்து: 5 க.அடி, திறப்பு: இல்லை.
News March 20, 2025
காசிக்கு நிகரான தேனியின் பெரிய கோவில்

தேனி மாவட்டதிலேயே பரப்பளவில் பெரியதாக பெரியகுளம் பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது.ராஜேந்திர சோழன் கட்டிய இந்த கோவிலில் மூலவராக சிவன் இருந்தாலும் முருகன் தான் பிரசித்தி பெற்றவர்.இங்குள்ள வராக நதியில் நீராடி முருகனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.காசியை போன்று நதியின் இருபுறமும் நேரெதிரே ஆண் பெண் மருத மரங்கள் அமைந்துள்ளது சிறப்பு .
News March 20, 2025
தேனியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (மாா்ச்.21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 98948 89794 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.