News April 14, 2025
தேனியில் மழைக்கு வாய்ப்பு

தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று(ஏப்ரல்.14) இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News November 13, 2025
தேனி: பைக் மீது டிராக்டர் மோதி இருவர் உயிரிழப்பு

தேனியை சேர்ந்தவர் சிவா (25). இவர் அவரது பைக்கில் அவரது நண்பரான அருண் (32) என்பவரை அழைத்து வைத்துக் கொண்டு நேற்று (நவ.12) திண்டுக்கல் குமுளி பைபாஸ் சாலையில் சென்றுள்ளார். கோட்டூர் அருகே பைக் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் டிராக்டர் இவர்களது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.
News November 13, 2025
தேனி: 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்த பிளஸ்.2 பள்ளி மாணவி மகேஸ்வரி (17). இவர் நேற்று முன்தினம் பள்ளியில் வகுப்பு முடித்து தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள தனது அறைக்கு சென்ற மாணவி யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 13, 2025
தேனி: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை

தேனி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் இங்கு <


