News October 12, 2024
தேனியில் புகார் எண் வெளியீடு
தேனி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் பாதிக்கப்படும் இனத்தைச் சேர்ந்த நபர்கள் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்கு பதிவு செய்து மற்றும் தீருதவிகள் தொடர்பாக முறையிடுகளை 18602021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
தேனியில் இலவச போட்டோகிராஃபி பயிற்சி
தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் இலவச போட்டோ & வீடியோ கிராஃபி பயிற்சி வருகின்ற டிச.2 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் 30.11.2024 தேதி கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 04546-251578, 9500314193, 9043651202 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *பகிரவும்*
News November 20, 2024
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் முகாம்
தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாம் இரண்டு கட்டமாக 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்தார். பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழைத்திருத்தம், புகைப்பட மாற்றம் போன்ற குறைகள் தெரிவிக்கலாம் என்றார்.
News November 20, 2024
தேனியில் நவ.23ம் தேதி கிராமசபை கூட்டங்கள் – ஆட்சியர்
தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் வருகிற 23ஆம் தேதி நடக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். அன்று நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டமானது, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டமானது அன்று முற்பகல் 11.00 மணியளவில் ஊராட்சி மன்றத்தலைவர்களால் நடத்தப்படுகிறது என்றார்.