News October 29, 2024

தேனியில் பசுமை பள்ளிகள் திட்டத்தில் 3 பள்ளிகள் தேர்வு

image

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளை பசுமை வளாகமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக பசுமை பள்ளிகள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆசாரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு, வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளன.

Similar News

News November 20, 2024

பெரியகுளத்தில்; உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம்

image

பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (நவ.20) காலை 9 மணி முதல் நாளை (நவ.21) காலை 9 மணி வரை உங்களுடன் உங்கள் ஊரில் முகாம் நடைபெறவுள்ளது. இதில் மருத்துவமனைகள், அலுவலகங்களில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இன்று மாலை 4:30 மணி முதல் 6 வரை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

சபரிமலை சென்று திரும்பிய வாகனம் விபத்து

image

தேனி மாவட்டம், பெரியகுளம் சாலையில் சபரிமலை சென்று திரும்பிய நேற்று(நவ.19) வடமாநில ஐயப்ப பக்தர் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். டிரைவர் பிரசன்னா, ராஜா, குமார், உள்பட ஐந்து பேரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News November 20, 2024

பெண்கள் சுயதொழில் துவங்க விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், வறுமை கோட்டிற்குள்ள பெண்கள் ஆகியோருக்கு நல வாரியத்தின் மூலம் பயனாளி ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இவர்கள் நடமாடும் உணவகங்கள், சிற்றுண்டிகடைகள், சலவைக்கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு பெற இயலும். விண்ணப்பிக்க டிச.7ஆம் தேதி என கலெக்டர் தெரிவித்துள்ளார்.