News April 22, 2025

தேனியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்.25 நடைபெற உள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் PG படித்தவர்கள் வரை பங்கேற்கலாம். இந்த <>லிங்கில் <<>>தங்களது விவரங்களை பதிய வேணடும். விரும்புவோர் ஏப்.25ம் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அனுகலாம்.விவரங்களுக்கு76959 73923.தொடர்பு கொள்ளலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News December 19, 2025

ஆண்டிபட்டி துணைமின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் நாளை (டிச.20) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஆண்டிபட்டி, டி. சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோயில், ராஜதானி, பாலக்கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

News December 19, 2025

தேனி: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் தண்டனை

image

போடி பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜ். இவர் அதே பகுதியில் 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடந்த 2024 மே.8ல் செல்வராஜூவை கைது செய்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணை நேற்று முடிந்த நிலையில் செல்வராஜூக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதித்தும், சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.

News December 19, 2025

நலவாரிய அட்டையில் போட்டோ, கையெழுத்து மாற்ற அழைப்பு

image

தேனி மாவட்டத்தில் கட்டுமான நலவாரியத்தில் பதிவு செய்த நலவாரிய அட்டையில் உறுப்பினரின் புகைப்படம், கையெழுத்து அவரவர் இருக்கும் இடத்திலோ, அல்லது இ-சேவை மையத்திலோ இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அவ்வாறு மாற்றம் செய்ய முடியாதவர்கள் தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என தகவல்.

error: Content is protected !!