News April 21, 2025
தேனியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 98948 89794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க –
Similar News
News December 24, 2025
தேனி: தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகள், மருமகன்!

போடி பகுதியை சேர்ந்தவர் அழகுத்தாய் (65). இவரது மகள் கவிதா. அவரது கணவா் சந்திரன். கவிதாவின் மகள் பாலகௌரி காதல் திருமணம் செய்து கொண்டாா். இதற்கு தனது தாய் அழகுத்தாய் உடந்தையாக இருந்ததாகக் கூறி அவரைக் கவிதாவும், சந்திரனும் சோ்ந்து தாக்கியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் போடி தாலுகா போலீஸாா் கவிதா, சந்திரன் ஆகியோா் மீது நேற்று (டிச.23) வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News December 24, 2025
கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்புசி முகாம்

தேனி மாவட்டத்தில் பசு மற்றும் எருமை இனங்களுக்கு கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் டிச.29 முதல் 18.01.2026 வரை 21 நாட்களுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கால்நடை மருத்துவமனயில் கோமாரி நோய் தடுப்புசி முகாம் நடைபெற உள்ளது. எனவே, தங்களது கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 24, 2025
தேனி: சுகாதாரத்துறையில் வேலை; APPLY NOW!

சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் (பொது) பிரிவில் மகப்பேறு 182, தடயவியல் 50, முதியோர் மருத்துவம் 10, இதய ஆப்பரேஷன் 20, ரேடியாலஜி 37 என மொத்தம் 299 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இங்கே <


