News August 26, 2024

தேனியில் குறு மாரத்தான் போட்டிக்கு அழைப்பு

image

தேனி, சின்னமனூர் ஒன்றியம், மார்க்கையன்கோட்டை அய்யப்பன் கோவில் திடலில், வரும் செப்.,5 ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த தினத்தை முன்னிட்டு, வ. உ. சி இளைஞர்கள் அறக்கட்டளை சார்பில் 2-ம் ஆண்டு குறு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. போட்டியின் முதல் சுற்று 16 வயது முதல் 23வயது வரை, 2ம் சுற்று 10வயது முதல் 15வயது வரை நடைபெறுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

Similar News

News November 28, 2025

தேனி உதவி இயக்குநர்கள் பணி மாறுதல்

image

தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) இருந்த எஸ்.அண்ணாதுரை தேனி மாவட்ட உதவி இயக்குநர் (தணிக்கை) பணிக்கும் அந்தப் பணியில் இருந்த சி.கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) பணிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மு.முருகையா மாற்றப்பட்டு, மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜ.உம்முள் ஜாமியா நியமிக்கப்பட்டுள்ளார்.

News November 27, 2025

போடி: ஆதரவற்ற குழந்தைகளுக்கு சீருடை வழங்கிய எம்பி

image

போடி ஒன்றியம் கோடாங்கிபட்டியில் ஆதரவற்ற இல்லத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச சீருடைகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் ஐயப்பன். அயலக அணி செயலாளர் ராஜன், முஜிப் ரஹ்மான் மற்றும் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஆதரவற்ற குழந்தைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News November 27, 2025

13-18 வயதுள்ள குழந்தைகளுக்கு விருதுடன் ரூ.1 லட்சம்

image

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்கு உழைக்கும் 13 வயது முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு ரூ.1 இலட்சம் பரிசுத்தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இணையத்தள முகவரியில்
(https://awards.tn.gov.in) 29.11.2025 க்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!