News October 23, 2024
தேனியில் கால்நடை கணக்கெடுப்பு பணி- ஆட்சியர் தகவல்

தேனி மாவட்டத்தில் 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி துவக்கப்பட உள்ளது என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளதாகவும் 21வது கால்நடை கணக்கெடுப்பு அக்டோபர் 25ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
BREAKING தேனிக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் நவ.11 வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் இன்று தேனி, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்காக மஞ்சள் அலட்ர்டை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இது ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது.
News November 7, 2025
தேனி அருகே லாரி மோதியதில் ஒருவர் பலி

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (36). இவர் நேற்று (நவ.6) அவரது பைக்கில் உப்புக்கோட்டை பகுதியில் சென்றுள்ளார். அப்போது எதிர் திசையில் செல்வேந்திரன் என்பவர் ஓட்டிவந்த லாரி ஈஸ்வரன் பைக் மீது மோதியது. இதில் ஈஸ்வரன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 7, 2025
தேனி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

தேனி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!


