News August 3, 2024

தேனியில் காட்டு யானை மிதித்து தொழிலாளி உயிரிழப்பு

image

தேனி மாவட்டம் தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காட்டு யானை மிதித்ததில் தொழிலாளி ரெங்கசாமி உயிரிழந்தார். இவர் கழுதை மூலமாக கேரளாவுக்கு பொருட்களை கொண்டு சென்றபோது காட்டு யானை மிதித்து உயிரிழந்ததாக தெரிகிறது. அவரது உடலை மீட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News October 17, 2025

தேனியில்…. கொடூரம் 75 வயது மூதாட்டியிடம் நகை பறிப்பு

image

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிட்டம்மாள் (75). இவர் அப்பகுதி பைபாஸ் சாலையில் சிறிய அளவிலான பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று (அக்.16) கடைக்கு பைக்கில் வந்த இரண்டு நபர்கள் மூதாட்டி இடம் சிகரெட் வாங்குவது போல் நடித்து அவரிடம் இருந்த இரண்டு கிராம் தங்க மூக்குத்தி மற்றும் 300 ரூபாயை பறித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News October 17, 2025

தேனியில் 22 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

image

கம்பம் வடக்கு போலீசார் நேற்று (அக்.16) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கே.கே.பட்டி சாலையில் உள்ள குளத்துக்கரை அருகே சந்தேகத்திற்கு இடமாக சாக்கு பையுடன் நின்று இருந்த பொன்னாசியன், செல்வராஜ் ஆகியோரை சோதனை செய்த பொழுது அவர்கள் 22.070 கிலோ கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

News October 17, 2025

தேனி: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

image

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!