News August 16, 2024

தேனியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று(ஆக.,16) 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, நெல்லை, குமரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 22, 2025

தேனி: போன் தொலைந்து விட்டதா..கவலைய விடுங்க..!

image

தேனி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<> கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 22, 2025

தேனி: பைக் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

image

போடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (30) மின் ஊழியரான இவர், நேற்று (நவ.21) இரவு அவரது பைக்கில் தேனி – போடி சாலையில் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் சாலையின் குறுக்கே சென்றதால், திடீரென பிரேக் போட்டதில் விபத்து ஏற்பட்டு ரஞ்சித் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 22, 2025

தேனி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு<> க்ளிக் செய்து<<>> Grievance Redressal, தேனி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!