News April 27, 2025
தேனியில் ஒரு இளநீர் ரூ.100 தாண்டும் – விவசாயிகள்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் இளநீரை விரும்பி பருகி வருகின்றனர். நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக மரங்களின் இளநீர் தேனியில் 60 முதல் 70 வரை விற்பனையாகிறது. இந்நிலையில், ஒரு இளநீர் விலை 100 ரூபாயை தாண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
Similar News
News December 16, 2025
தேனியில் தோட்ட வேலைக்கு சென்றவர் உயிரிழப்பு!

போடி, ஆதிப்பட்டி பகுதியை சோ்ந்தவர் வேலாண்டி. இவா் முத்துக்கோம்பை பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலை பாா்த்து வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையான இவர் சில தினங்களுக்கு முன் ஆதிப்பட்டிக்கு வந்துவிட்டு தோட்டத்துக்கு செல்வதாகக் கூறி சென்ற நிலையில் அணைக்கரைப்பட்டியிலிருந்து முத்துக்கோம்பைக்கு செல்லும் பாதையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 16, 2025
தேனியில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

தேனி துணை மின் நிலையத்தில் நாளை (டிச.17) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, அரண்மனைப்புதூர், பூதிப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகா தெரிவித்துள்ளார். SHARE IT
News December 16, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (15.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.


