News August 2, 2024
தேனியில் ஒருவரை கொன்ற 15 பேர்; போலீசார் விசாரணை

தேனி மாவட்டம் கரையான்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன்(50). இவரை லட்சுமி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போடி தாலுகா போலீசார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாலை கடக்கும்போது ஏற்பட்ட பிரச்சனையில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
Similar News
News December 18, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (17.12.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News December 17, 2025
தேனி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க
News December 17, 2025
தேனியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் சிவஜோதி. இவரது கணவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவரது குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் சிவஜோதி வீட்டிற்கு சென்ற ராகேஷ் அவரது உறவினர் வெற்றி ஆகியோர் சிவஜோதியிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது (டிச.16) செய்தனர்


