News April 26, 2025
தேனியில் ஏப்ரல் மாதம் இயல்பை விட அதிகளவு மழை

தேனி மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவான 829.80 மி.மீ.க்கு ஏப்ரல் மாதம் வரை 179.24 மி.மீ பெறப்பட்டுள்ளது. இது இயல்பான மழையளவை காட்டிலும் 32.86 மி.மீ குறைவாகும். ஏப்ரல் மாத இயல்பு மழையளவான 99 மி.மீ-க்கு தற்போது வரை 108.8 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாத இயல்பான மழை அளவை காட்டிலும் 9.8 மி.மீ அதிகமாகும் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News April 27, 2025
தேனியில் ஒரு இளநீர் ரூ.100 தாண்டும் – விவசாயிகள்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் இளநீரை விரும்பி பருகி வருகின்றனர். நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக மரங்களின் இளநீர் தேனியில் 60 முதல் 70 வரை விற்பனையாகிறது. இந்நிலையில், ஒரு இளநீர் விலை 100 ரூபாயை தாண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
News April 27, 2025
தேனியில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் இல்லை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதார் பாலாஜி என்பவர் முதல்வர் தனிப்பிரிவுக்கு பள்ளிகளில் மாணாக்கர்களை சேர்ப்பதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, மாணாக்கர்களை பள்ளிகளில் சேர்க்கவும், பொது தேர்வு எழுதவும் ஆதார் கட்டாயம் இல்லை என்ற தகவலை புகார்தாரருக்கு தெரிவித்துள்ளார்.
News April 27, 2025
தேனியில் ஆட்டுக்கொல்லி தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது

தேனி மாவட்டத்தில் ஆடுகளுக்கு ஏற்படும் வியாதிகளில் பெருமளவில் ஆடுகளை தாக்கும் நோய் ஆட்டுக்கொல்லி நோய் என்று குறிப்பிடப்படுகிறது இதனால் தேனி மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார் இதனால் அந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் தகவல்