News March 29, 2024
தேனியில் இனி குதூகலம்

தேனி மாவட்டம் சீலையம்பட்டியை மையமாகக் கொண்டு முல்லைப் பெரியாறு ஆறு உள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் இருந்து இளைஞர்கள் கோடைகால விடுமுறையை ஆனந்த குளியல் இட்டு கழிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், அனைத்து இளைஞர்களும் இங்கு வந்து ஆனந்த குளியல் இடுகின்றனர். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரைத் தொடங்கப்பட இருப்பதால் தண்ணீர் வரத்து சற்று மிக குறைவாக உள்ளது.
Similar News
News November 12, 2025
தேனி: வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

பெரியகுளம், டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (60). இவா் தேனி அருகே மதுராபுரி பகுதியில் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்றாா். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் காணப்படாத வாகனம் பாலமுருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. படுகாயமடைந்த பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (நவ.11) உயிரிழந்தாா். இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு.
News November 12, 2025
தேனி: நிதி நிறுவனத்தில் ரூ.16.05 லட்சம் மோசடி

கம்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அதன் மேலாளர் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். நிதி நிறுவனத்தின் வங்கி வரவு, செலவுகளை ஆய்வு செய்தபோது 238 வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு செலுத்திய ரூ.16,05,366 ஐ அங்கு பணிபுரியும் களப்பணியாளர்கள் சம்பத்குமார் (34), பிரவீனா (29) ஆகியோர் கையாடல் செய்தது தெரிந்தது. இதுகுறித்து இருவர் மீதும் போலீசார் நேற்று (நவ.11) வழக்கு பதிவு.
News November 12, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (11.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.


