News April 27, 2025
தேனியில் ஆட்டுக்கொல்லி தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது

தேனி மாவட்டத்தில் ஆடுகளுக்கு ஏற்படும் வியாதிகளில் பெருமளவில் ஆடுகளை தாக்கும் நோய் ஆட்டுக்கொல்லி நோய் என்று குறிப்பிடப்படுகிறது இதனால் தேனி மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார் இதனால் அந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் தகவல்
Similar News
News September 19, 2025
தேனியில் இங்கெல்லாம் நாளை மின்தடை

தேனியில் மின் பராமரிப்பு பணி காரணமாக தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தேனி புதிய பேருந்து நிலைய வளாகம், சிவாஜி நகர், பாரஸ்ட் ரோடு, சிட்கோ தொழிற்பேட்டை வளாகம், வடபுதுப்பட்டி, அரப்படித்தேவன்பட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகைபுதூர், ஜம்புலிபுத்தூர், மருகால்பட்டி, வைகை அணை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News September 19, 2025
தேனி: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

தேனி மாவட்ட த்தில் IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை தாங்கள் பெற தேனியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்து உள்ளார்.
News September 18, 2025
தேனியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தேனி வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 19.09.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். மேலும் தகலுக்காக 98948-89794 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.