News April 30, 2024
தேனிக்கு இயற்கை அளித்த வரம் மேகமலை!

மேகமலை காடுகள் ஏலக்காய் தோட்டங்களும், தேயிலை தோட்டங்களும் நிறைந்த இடமாகும். சுருளி அருவியின் பிறப்பிடமான மேகமலை, பசுமைமாறா காடுகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், காட்டு எருமைகள், மான்கள், புலிகள் போன்றவையை பார்வையிட ஏற்ற சுற்றுலாத் தலமாகும். மேகமலை புலிகள் சரணாலயம் 1016 சகிமீ பரப்பள கொண்டது. உலகில் உள்ள 36 பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதிகளில் மேகமலை புலிகல் காப்பகமும் ஒன்று.
Similar News
News April 19, 2025
மலர் கண்காட்சியை கண்டுகளித்த மாற்றுத்திறனாளிகள்

கேரளா மாநிலம் தேக்கடியில் நடைபெற்ற மலர் கண்காட்சியை, கம்பம் தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, ஜெயம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மலர் கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News April 19, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 19.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News April 19, 2025
காணொலி காட்சி மூலம் பார்வையிட்ட ஆட்சியர்

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (19.04.2025) காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வினை, காணொளிக்காட்சி வாயிலாக, தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் மற்றும் கைவினைஞர்கள் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.