News January 23, 2025
தேசிய வாக்காளர் தினத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தேசிய வாக்காளர் தினம் வரும் 25ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 26, 2025
சிவகங்கை: பாஜக நிர்வாகி கொலை; ஒருவர் கைது.!

சிவகங்கை வாரச் சந்தை அருகே பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட வா்த்தகப் பிரிவுத் தலைவர் சதீஷ் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடா்பாக சிவகங்கை போலீசார் வழக்குப் பதிவு செய்து 7 பேரை கைது செய்தனா். இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த மதுரை மாவட்டம், அழகா்கோவில் பகுதியைச் சோ்ந்த காா்த்திக்கை சிவகங்கை மாவட்ட போலீசார் நேற்று கைது செய்தனா்.
News October 26, 2025
சிவகங்கை: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.<
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.
News October 26, 2025
சிவகங்கை: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல்<


