News December 31, 2024
தேசிய வருவாய் வழி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

நடப்பு கல்வியாண்டில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய வருவாய் வழி & திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு பிப்.22ல் நடைபெறவுள்ளது. மாணவர்கள் இன்று முதல் இணையதள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஜன.24ம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என நெல்லை சி இ ஓ சிவக்குமார் தெரிவித்துள்ளார். வெற்றி பெறுவோருக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். *ஷேர்
Similar News
News October 19, 2025
இன்று இரவு மாநகரில் காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (அக்.19) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News October 19, 2025
நெல்லை: ஊராட்சி செயலர் பணி APPLY விபரம்!

நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 19, 2025
நெல்லை: குடிநீரில் குளோரின் அளவு பரிசோதிப்பு

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா உத்தரவின்படி இன்று திருநெல்வேலி மண்டலம் வார்டு 15 பர்வத சிங்க ராஜா தெரு பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கபடும் குடிநீரில் மாநகராட்சி பணியாளர்களால் குளோரின் அளவு பரிசோதிக்கப்பட்டது. தொடர் மழையால் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் மாநகராட்சியில் இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.