News April 21, 2025
தேசிய போட்டிக்கு கரூர் வீரர் தேர்வு

கரூர் வீரர் சீனியர் பிரிவிலான தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு. எதிர் வரும் தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு சீனியர் பிரிவில் தமிழக அணி சார்பாக விளையாட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த M.பிரசாந்த் என்ற வீரர் தேர்வாகியுள்ளார். இவருக்கு கரூர் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க செயலாளர் Dr.ராஜேந்திரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
கரூர்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
கரூரில் வேலை அறிவித்தார் கலெக்டர்!

கரூரில் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பயனளிக்கும் நோக்கில் வரும் அக்.31 வெண்ணைமலையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை முகாம் நடைபெறும். இதில் 200க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8 ஆம் வகுப்பு அனைத்து வகையான படிப்பினரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் தங்கவேல் அழைப்பு!
News October 29, 2025
கரூர்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது https://www.sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


