News May 16, 2024
தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

புதுப்பாளையம் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் தாய் உள்ளிட்ட 3 குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள், பொதுமக்கள் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News November 27, 2025
அரியலூர்: கணவர் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, அரியலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9842074680) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News November 27, 2025
அரியலூரில் மின்தடை அறிவிப்பு

அரியலூர் மாவட்டம் கீழபழுர் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.28) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. எனவே கீழபழுர் மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பொய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.
News November 27, 2025
அரியலூர்: அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் அரசு பள்ளியில் நலம்காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் வருகிற நவ.29 தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவது மற்றும் இரத்த பரிசோதனையை மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ சேவை முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


