News March 25, 2025
தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானையால் பரபரப்பு

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒற்றை காட்டு யானை நேற்று மதியம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் டபுள் ரோடு அருகே சாலையின் குறுக்கே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்தி விட்டனர்.
Similar News
News July 10, 2025
அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை

தமிழகத்தில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு இன்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்12-ம் தேதி வரை <
News July 10, 2025
ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும்.(<<17014280>>மேலும் தகவல்<<>>)
News July 10, 2025
ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு (2/2)

▶️ ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி
▶️ விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை)
▶️ விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000.
▶️ விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமச்சடங்கு செய்ய ரூ.5000 வரை.