News March 25, 2025
தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானையால் பரபரப்பு

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒற்றை காட்டு யானை நேற்று மதியம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் டபுள் ரோடு அருகே சாலையின் குறுக்கே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்தி விட்டனர்.
Similar News
News December 4, 2025
நீலகிரி: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnlgdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0423-2443962 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News December 4, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 19.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.கலெக்டர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News December 4, 2025
நீலகிரி: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <


