News August 15, 2024
தேசிய கொடியேந்தி மாபெரும் இருசக்கர வாகன பேரணி

தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பாக இன்று கும்பகோணத்தில் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார் தலைமையில் தேசிய கொடியேந்தி மாபெரும் இருசக்கர வாகன பேரணி கும்பகோணம் தாராசுரம் ரவுண்டனா முதல் மகாமககுளம் வரை நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட, மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Similar News
News December 21, 2025
தஞ்சை: போலி கணக்கு – போலீசார் எச்சரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பெயரில் போலியான Facebook முகநூல் தொடங்கப்பட்டுள்ளது. அந்த முகநூலில் ஏராளமான பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையின் சார்பாக இது போலியான முகநூல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கணக்கை யாரும் பின் தொடர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 21, 2025
தஞ்சை: போலி நகைகளை அடகு வைத்து மோசடி

திருவையாறு, கண்டியூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் அடகு கடையில் போலி தங்க நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் காரைக்கால் பகுதியை சேர்ந்த சிவா(26), ஸ்ரீராம் (21) ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.
News December 21, 2025
தஞ்சை: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

தஞ்சை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <


