News November 23, 2024
தேசிய அளவில் திருப்பூர் மாணவர் அசத்தல்

கொல்கத்தாவில், ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், தேசிய சதுரங்க போட்டி நவ. 19 முதல், 21ம் தேதி வரை மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. அதில், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், தமிழக அணி சார்பில், 20 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். அவர்களில், ஒருவரான, திருப்பூர், நெருப்பெரிச்சல், திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் கோகுல்கிருஷ்ணா, 6-4 செட் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
Similar News
News September 16, 2025
திருப்பூர் மக்களே: இந்த வாட்ஸ் அப் நம்பர் முக்கியம்!

திருப்பூர் மக்களே.. பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 16, 2025
திருப்பூர்: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது. ▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். ▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க <
News September 16, 2025
திருப்பூர் காவல்துறை எச்சரிக்கை

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு வங்கி சார்ந்த சேவைகளின் விழிப்புணர்வு வெளியிடப்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து பெறப்படும் ஓடிபி மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை, பிற நபர்களுக்கு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். வங்கியில் இருந்து தொடர்பு கொள்வதாக, பொதுமக்களை ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.