News November 24, 2024
தேசிய அளவிலான போட்டி: உடுமலை வீரர்கள் அபாரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை சேர்ந்த வீரர்கள், தேசிய அளவிலான கூடைபந்தூ போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் சத்தீஸ்கரில் நடைபெற்ற போட்டியில் 17 வயது பிரிவில், தமிழ்நாடு மாணவர்கள் இடம் பெற்று சாதனை படைத்தனர். மேலும், இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தினர். இந்த நிலையில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் கல்வித்துறை சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Similar News
News September 19, 2025
உடுமலையில் வேலை தேடுவோர் கவனத்திற்கு!

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது எனவே உடுமலை பகுதியில் வேலை தேடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 19, 2025
திருப்பூர் தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு சேவை

இந்திய தபால்துறை சார்பில் பல்வேறு சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட காந்திநகர் தபால் அலுவலகத்தில் ரயில்வே பயணிகள் தங்கள் ரயில் பயணத்தின் முன்பதிவு மற்றும் தட்கல் முன் பதிவுகளை செய்து கொள்ள சேவை தொடங்கப்பட்டிருப்பதாக திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
திருப்பூர்: பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது

திருப்பூர், திருமுருகன்பூண்டி அருகே பெண் ஒருவர் வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே காம்பவுண்டில் வசிக்கும் சுரேஷ்குமார் என்பவர், பெண் குளிப்பதை தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இது தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீசில், பெண் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.