News September 13, 2024

தேசிய அங்கீகார சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (NABL) தரச்சான்று பெற்றுள்ளதை தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தியிடம் வேளாண்மை துறை அலுவலர்கள் தரச்சான்று காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் வேளாண்மை இணை இயக்குநர்,குணசேகரன், வேளாண்மை துணை இயக்குநர், தேன்மொழி, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 5, 2025

தருமபுரி இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி!

image

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI), வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சிகளை வழங்குகிறது. இதில் சிசிடிவி சர்வீஸ், கால்நடை & மீன் வளர்ப்பு போன்ற பயிற்சிகள் உள்ளன. உணவு, சீருடை & பயிற்சி அனைத்தும் இலவசம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிச-10. மேலும் தகவல்களுக்கு: 04342230511, 6383147667 என்ற எண்ணை அணுகவும்.

News December 5, 2025

தருமபுரி: பிணையம் இல்லாமல் ரூ.10 கோடி வரை கடன்!

image

புதிய சிறு, குறு நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கு ரூ.10 கோடி வரை பிணையமில்லாத கடன்களை பெற உதவி செய்கிறது மத்திய அரசின் CGTMSE திட்டம். இந்த CGTMSE திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கிகளை அணுகி, வணிக கடனுக்கு விண்ணப்பித்த பிறகு, பிணையமோ அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதமோ இல்லாமல் ரூ.10 கோடி வரை கடன் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும். ஷேர் பண்ணுங்க!

News December 5, 2025

தருமபுரி: பெண்களின் பாதுகாப்பு எண்கள்!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்

error: Content is protected !!