News October 16, 2024

தொடர் மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்

image

அம்மாப்பேட்டை, உடையார்கோயில், சாலியமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது நெற்கதிர்கல் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்தனர். மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

Similar News

News July 11, 2025

25 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 25 வயதுக்கு உட்பட் டோருக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் தஞ்சை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு வருகிற 13ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தஞ்சை பரிசுத்தம் நகரில் உள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் 1.9.2000க்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 11, 2025

தஞ்சாவூர் வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்கிற முழக்கத்துடன், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கும்பகோணத்துக்கு ஜூலை 22ஆம் தேதி மாலை 4 மணிக்கும், பாபநாசத்துக்கு 5 மணிக்கும், தஞ்சாவூருக்கு மாலை 6 மணிக்கும் வருகிறாா். தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் பகுதியிலிருந்து ரயிலடி வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறாா் என தஞ்சை மாவட்ட அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 11, 2025

BREAKING: தஞ்சை வருகை தரும் பிரதமர் மோடி

image

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளார். அதற்கு முன்னதாக அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. SHARE NOW

error: Content is protected !!