News May 7, 2024
தெற்கு ரயில்வே அட்டவணையில் மாற்றம்

சென்னை கடற்கரையில் இருந்து இன்றிரவு 8.35 மற்றும் 10.05 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறு மார்க்கத்தில், இந்த ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து இயங்கும். இது தவிர காட்பாடி- ஜோலார்பேட்டை சிறப்பு ரயில் மே 8, 10 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 21, 2025
சென்னையில் மிஸ் பண்ணக்கூடாத 10 கோயில்கள்!

▶ பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி
▶ கபாலீஸ்வரர் கோயில், மைலாப்பூர்
▶ வடபழனி முருகன் கோயில், வடபழனி
▶ அஷ்டலட்சுமி கோயில், பெசன்ட் நகர்
▶ ஐயப்பன் கோயில், மஹாலிங்கபுரம்
▶ திருப்பதி தேவஸ்தானம் கோயில், தி.நகர்
▶ சீரடி சாய்பாபா கோயில், மயிலாப்பூர்
▶ மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர்
▶ ஆஞ்சநேயர் கோயில், நங்கநல்லூர்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்
News April 21, 2025
சென்னையில் நுங்கு விற்பனை அமோகம்

சென்னையில், நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சூட்டை தணிக்கும் நுங்கு, தர்பூசணி, இளநீர், பழக்கடைகளை பொதுமக்கள் நாடி செல்கின்றனர். போருர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 3 நுங்கு ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.50 வரை விற்கப்படுகிறது.
News April 21, 2025
சென்னையில் வாட்டி வதைக்கும் வெயில்

சென்னையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க