News September 14, 2024
தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியில் இந்தியா முதலிடம்

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் கடந்த 11-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூடான், நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட 7 நாடுகள் பங்கேற்றன. இதில் இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. தமிழகத்தை சேர்ந்த 7 வீரர், வீராங்கனைகள் 5 தங்கம், 2 வெள்ளி உள்ளிட்ட 7 பதக்கங்களை வென்ற அசத்தினர்.
Similar News
News February 7, 2026
சென்னை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

கொடுங்கையூர் மீனாம்பாள் சிவரான் தெருவில் வசிப்பவர் நசீமா பேகம். கணவரை பிரிந்து தனது மகன் பசுருல்லா (23) உடன் தனியாக வசித்து வந்தார். இவர், கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்ற பசுருல்லா, மின்விசிறியில் தாயின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 7, 2026
சென்னையில் இன்று இங்கெல்லாம் மின்தடை!

சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று (பிப்.07) மின் தடை ஏற்பட உள்ளது. அதன்படி திருமுடிவாக்கம், காரம்பாக்கம், அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பெருங்களத்தூர், முடிச்சூர், ஸ்டான்லி, விருகம்பாக்கம், மாதவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. உங்க ஏரியா இருக்கிறதா என்பதை <
News February 7, 2026
பள்ளிக்கரணை: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

பள்ளிக்கரணை மின்வாரிய அலுவலகம் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். பள்ளிக்கரணை போலீசார் பெண் உடலை கைப்பற்றி விசாரித்ததில், இறந்தவர் அதேப் பகுதியை சேர்ந்த நிவேதிதா (30) என்பது தெரியவந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


