News September 14, 2024
தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியில் இந்தியா முதலிடம்

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் கடந்த 11-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூடான், நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட 7 நாடுகள் பங்கேற்றன. இதில் இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. தமிழகத்தை சேர்ந்த 7 வீரர், வீராங்கனைகள் 5 தங்கம், 2 வெள்ளி உள்ளிட்ட 7 பதக்கங்களை வென்ற அசத்தினர்.
Similar News
News December 11, 2025
சென்னை: ரேஷன் அட்டை உள்ளதா? முக்கிய அறிவிப்பு!

பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் டிச.13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 11, 2025
சென்னை சர்வதேச திரைப்பட விழா: இன்று தொடக்கம்

23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 51 நாடுகளில் இருந்து 122 திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. ரஜினியின் 50 ஆண்டு கால சாதனையை கொண்டாடும் வகையில் பாட்ஷா திரைப்படம் திரையிடப்படுகிறது. ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்க உள்ளனர்.
News December 11, 2025
சென்னை: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

சென்னை மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <


