News March 25, 2025
தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். 4-15 வயதுடைய மரங்களுக்கு தலா ரூ.2.25, 16-60 வயதுடைய மரங்களுக்கு தலா ரூ.3.50 செலுத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
ஈரோடு: பெண்களுக்கு இலவச தையற்கலை பயிற்சி

சித்தோடு, அரசினர் பொறியியல் கல்லூரி சாலை, வாசவி காலேஜ் அருகில் செயல்படும் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி வரும் 20-12-2025 முதல் 31-01-2026 வரை நடைபெற உள்ளது. இதில், பயிற்சி, சீருடை, உணவு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 87783-23213, 72006-50604, 0424-2400338 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க
News December 13, 2025
ஈரோடு:பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <
News December 13, 2025
பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா தேதி அறிவிப்பு!

ஈரோடு சத்தியமங்கலம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபண்ணாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 2026-ம் ஆண்டுக்கான குண்டம் திருவிழா தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026ஆம் ஆண்டு மார்ச் 16 பங்குனி 2-ம் நாள் திங்கட்கிழமை பூச்சாட்டு விழா ஆரம்பம். முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா மார்ச் 31 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மறுபூஜை (6-4-26) அன்று நடைபெறவுள்ளது.


