News April 4, 2025

தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில்

image

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமாக ராயபுரம் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து 1856 ஜுன் 1ம் தேதி ராயபுரம் டூ வாலாஜா பேட்டை வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் தான் தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில்.ராயபுரம் ரயில்நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பின்பு அங்கிருந்து இயக்கப்பட்ட முதல் பயணிகள் ரயிலும் இது தான். ராணிப்பேட்டை மாவட்டத்தின் பெருமை பறைசாற்றும் இந்த அரிய தகவலை ஷேர் பண்ணுங்க…

Similar News

News April 5, 2025

போரில் பூத்த ராணிப்பேட்டை

image

தமிழ்நாட்டில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான ராணிப்பேட்டையின் பெயருக்கு பின்னால் ஒரு சுவாரசியம் உள்ளது.ஆற்காடு நவாப் செஞ்சி மீது படையெடுத்த போது வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்கு மற்றும் அவருக்காக உடன்கட்டை ஏறிய ராணிபாய்க்காக பாலாற்றின் வடக்கு பகுதியில் புதிய நகரை உருவாக்கி அதற்கு ‘ராணிப்பேட்டை ‘ என பெயரிட்டார்.போரில் பூத்த ராணிப்பேட்டை வரலாற்றை ஷேர் பண்ணுங்க..

News April 5, 2025

மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு வேலைவாய்ப்பு

image

ராணிப்பேட்டையில் உள்ள எம்.ஆர்.எஃப் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 20-25 வயதுக்குட்பட்டவர்கள் டிகிரி கல்வி தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000-25,000 வழங்கப்படும். இப்பணிக்கு 100 காலி பணியிடங்கள் உள்ளது. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 5, 2025

ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு

image

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பால சரஸ்வதி (60), இவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு சப்தகிரி ரயிலில் வந்து கொண்டிருந்தனர். ஏப்ரல் 3 இரவு அரக்கோணம் ரயில் நிலையம் 5வது நடைமேடையில் ரயில் நின்று புறப்படும் போது அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் பால சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். ரயில்வே போலீசில் நேற்று புகார் தெரிவித்தார்.

error: Content is protected !!