News March 26, 2025
தென்காசி Ex. MLA கருப்பசாமி பாண்டியன் காலமானார்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் இன்று(மார்ச் 26) காலை உடல் நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் காலமானர். இவர் அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு அதிமுக நிர்வாகிகள் உட்பட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் 1977-ல் அதிமுக சார்பில் ஆலங்குளம் & 2006-ல் திமுக சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 3, 2026
தென்காசி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

தென்காசி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன் மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க
News January 3, 2026
தென்காசியில் நாளை வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ஜனவரி 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்று திறனாளிகள் உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
தென்காசி: சாலை விபத்தில் தந்தை, மகன் பரிதாப பலி

தென்காசி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கண்ணன் தனது குடும்பத்தோடு கடையநல்லூர் அருகே டூவீலரில் வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் அவரது 5 வயது மகன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காவலர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு தென்காசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சஅளிக்கப்பட்டு வருகிறது.


