News December 5, 2024
தென்காசி: 5 உலக சாதனை படைத்த 7 மாத குழந்தை!

தென்காசியை சேர்ந்த லயா என்ற பெண் குழந்தை 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்றுள்ளது. தற்போது இந்த குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது. குழந்தையின் நுண்ணறிவு திறனை பாராட்டி நேற்று(டிச.,4) தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் அவர்களும் தற்போது குழந்தையை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பெற்றோருக்கு நுண்ணறிவு திறனை மேலும் வளர்ப்பதற்கான அறிவுரையும் வழங்கினார். SHARE IT.
Similar News
News November 22, 2025
தென்காசி: லாரி மோதி 11 மாடுகள் பலி!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தரணி சக்கரை ஆலை அருகே விஸ்வநாதப்பேரி பகுதியை சேர்ந்த பேச்சியப்பன் என்பவருக்கு சொந்தமான மாடுகளை இன்று கடையநல்லூர் கொண்டு செல்லும் வழியில், தரணி அருகே செங்கலை ஏற்றி வந்த கனரக வாகனம் மோதியது. இதில், 20 மாடுகள் பலத்த காயம் அடைந்தன. 11 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 22, 2025
தென்காசி: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News November 22, 2025
தென்காசி மாவட்டத்தில் மின்தடையா? கால் பண்ணுங்க…

தென்காசி மாவட்ட மக்கள், மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயலி மூலமாகவும், (TNPDCL OFFICIAL APP) தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சமூக வலைதளங்கள், திருநெல்வேலி மின் தடை நீக்கும் மைய தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 மூலம் தகவல் தெரிவிக்கலாம்


