News January 23, 2025

தென்காசி வரும் கனிமொழி எம்பி – ஆலோசனை கூட்டம்

image

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜன.29-ல் தென்காசி தெற்கு மாவட்டம் வருகை தர உள்ளார் . இது தொடர்பாக மாவட்ட மகளிர், மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சுரண்டையில் நேற்று(ஜன.22) நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன் பங்கேற்றனர்.

Similar News

News October 16, 2025

BREAKING: தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குற்றலாம், தென்காசி நகர் பகுதிகளில் கனத்த மழை பெய்கிறது. இதனிடையே தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று (16.10.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

News October 16, 2025

குற்றாலத்தில் குளிக்க அனுமதி

image

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகள், அருவிகளுக்கு நீர் வார்த்து அதிகமானது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி பகுதியில் காட்டாற்று வெள்ளம் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. மழையின் அளவு குறைத்து அருவிகளில் சீராக தண்ணீர் விழுவதால் நேற்று முதலே குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

News October 15, 2025

நெல்லை: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<> CLICK <<>>செய்க.
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.’

error: Content is protected !!