News April 13, 2024
தென்காசி: லஞ்சம் வாங்கிய விஏஓ..!

பெரிய சாமியாபுரம் சேர்ந்தவர் விவசாயி கருப்பசாமி. இவர் தனக்கு சொந்தமான இடத்தை பட்டா மாற்ற விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில், ஈச்சந்தா விஏஓ விஜயகுமாரிடம் பட்டா மாற்ற ரூ.13,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து கருப்பசாமி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்ததின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் லஞ்சம் வாங்கிய விஏஓ நேற்று இரவு அதிரடி கைது செய்தனர்.
Similar News
News November 21, 2025
தென்காசி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 21, 2025
தென்காசி: PF-ல் சந்தேகமா? முகாம் தேதி அறிவிப்பு!

தென்காசி மாவட்டம் புளியங்குடி எஸ்பி நகர் வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வருகிற 27ஆம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில், வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், தொழிற்சங்கத்தினர், தொழில் நிறுவன அமைப்புகள் பங்கேற்று பயனடையலாம் என ஆணையர் சிவ சண்முகம் தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
தென்காசி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்தில் இன்று (நவ. 21) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம், இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தெரியாதவர்களக்கு SHARE செய்து உதவுங்க.


