News August 25, 2024
தென்காசி ரயில் பயணிகளின் புது கோரிக்கை

செங்கோட்டையில் இருந்து பெங்களூருக்கு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, செப்.,5, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டை- மைசூருக்கும், மறுமார்க்கமாக செப்.,4, 7 தேதிகளில் மைசூர்- செங்கோட்டைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்தது. இந்நிலையில், இதனை வாராந்திர ரயிலாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News December 1, 2025
வென்னிமலை முருகனுக்கு நாளை வருஷாபிஷேகம்

பாவூர்சத்திரம் வென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (டிச.2) நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் கணபதி ஹோமம், யாகசாலை பூஜையும், 10.30 மணி முதல் 12 மணிக்குள் விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 1 மணிக்கு அன்னதானமும், இரவு முருக பெருமான் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
News December 1, 2025
தென்காசி: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

தென்காசி மக்களே உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
News December 1, 2025
தென்காசி கோர விபத்து; லாரி ஓட்டுநர் கைது!

தென்காசி மாவட்டம், சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் அருள் செல்வபிரபு, மனைவி உஷா, சுரண்டை நகராட்சி காங்., முன்னாள் கவுன்சிலர் மற்றும் பிளஸ்சி நேற்று ரெட்டைகுளம் விலக்கு பகுதியில் பின்னால் வந்த காய்கறி லாரி, பைக் மீது மோதியதில் கீழே விழுந்த மூவரும் லாரி டயரில் சிக்கி உயிரிழந்தனர். குலையநேரியை சேர்ந்த லாரி டிரைவர் குமார் 30, என்பவரை, சுரண்டை போலீசார் கைது செய்தனர்.


